இன்று முதல் ஊரடங்கு தளர்வு.. இவைகளுக்கு தடை தொடரும்..!

தமிழகத்தில் செப்டம்பர் 30-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பொது முடக்கத்தின் 4-ஆம் கட்ட தளர்வுகளையும்

தமிழகத்தில் செப்டம்பர் 30-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பொது முடக்கத்தின் 4-ஆம் கட்ட தளர்வுகளையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் தமிழகத்தில் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை ரத்தானது.

இந்நிலையில், மறுஉத்தரவு வரும் வரை  தமிழக அரசு சிலவற்றிற்கு தடை தொடரும் என அறிவித்துள்ளது. அதன்படி,

பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்விநிறுவனங்கள் இயங்க தடை .எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதோடு, அதை ஊக்குவிக்கலாம்.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் (Entertainment Amusement Parks), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து (Suburban trains)

மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள் கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.