#BREAKING: தமிழகத்தில் ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

தமிழகத்தில் புதிதாக 5,709  பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,49,654  ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 5,709  பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,49,654  ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் மொத்தமாக 3,49,654  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,182 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,19,059 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இன்று 121 பேர் பலியாகியுள்ளனர். அதில், 32 பேர் தனியார் மருத்துவமனையிலும், 89 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 6007 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 5850 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 2,89,787 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.