கடந்த 2008-ம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பெரு மந்தத்தின் போது கச்சா எண்ணெய்யின் விலை சரிவை சந்தித்து. அதன் பிறகு தற்போது கொரோனோ காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை அதற்கு இணையான சரிவை சந்தித்துள்ளது.
உலகின் இதுவரை 105 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்து விலை சரியத் தொடங்கியது. விலை சரிவை தடுப்பதற்கு, உற்பத்தியை குறைத்து, தேவையை அதிகரித்தால் விலை குரைவை தடுக்கலாம் என உலகில் அதிக அளவு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான, சவுதி அரேபியாவுக்கும் ரஷ்யாவுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் விலை மேலும் பெரும் சரிவை சந்தித்தது. உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஆகவே, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடந்த வாரத்தில் குறைக்கப்பட்டது.இந்நிலையில் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் சரிவடைந்ததை தொடர்ந்து, இந்த சாதகமான சூழலை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இதன்படி,
கச்சா எண்ணெயின் விலை மிகப்பெரிய அளவில் சரிந்திருந்தாலும், கலால் வரி உயர்த்தப்பட்டதால், பெட்ரோல் மற்றம் டீசலின் தற்போதைய விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அரசின் இந்த நடவடிக்கை முட்டாள்தனமானது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். இதேபோல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயி விலை அதிகரிக்கும் போது அதை அனுபவிக்கும் மக்கள் அதே எண்ணெய்ய் விலை குறையும் போது மட்டும் ஏன் அதை அனுபவிக்க முடியவில்லை என்று உள்ளுக்குள் குமுறுகின்றனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…