இந்தியாவில் இந்த 2023ஆம் வருடம் சராசரி சம்பளம் 10.2 % சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சராசரி சம்பள உயர்வு:இந்தியாவில் சராசரி சம்பளம் 2023 இல் 10.2 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முக்கியமாக இ-காமர்ஸ், தொழில்முறை சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
unknown node“EY ஃபியூச்சர் ஆஃப் பே”:பியூச்சர் ஆஃப் பே 2023 வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் சராசரி சம்பளம் 2023ல் 10.2 சதவீதம் அதிகரிக்கும், 2022ல் 10.4 சதவீதத்தை ஒப்பிடும்போது இது குறைவாக இருக்கும், ஆனாலும் இரட்டை இலக்கத்தில் சம்பள உயர்வு சதவீதம் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
unknown nodeஒட்டுமொத்த அளவில் அனைத்து பணியாளர்களுக்கான திட்டமிடப்பட்ட சம்பள உயர்வு 2023 ஆம் ஆண்டில் 2022ஆம் அண்டை விட குறைவாக இருக்கும், ப்ளூ காலர் தொழிலாளர்களுக்கு (லேபர் தொழிலாளர்கள்) இதில் கடந்த 2022ஆம் ஆண்டு சம்பள உயர்வை விட இந்த ஆண்டு அதிகளவில் சம்பள உயர்வில் சரிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிகப்பெரிய ஊதிய உயர்வுகளைக் கொண்டதாகக் கூறப்படும் முதல் மூன்று துறைகள், தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கை கூறுகிறது.
unknown nodeஇ-காமர்ஸ்:ஆன்லைன் வர்த்தக நிறுவனமான இ-காமர்ஸ் நிறுவனம் அதிக அளவில் 12.5% சதவீதத்தில் மிக உயர்ந்த ஊதிய வளர்ச்சியைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து தொழில்முறை சேவைகள் 11.9% சதவீதமாகவும், ஐடி(IT) துறையில் 10.8% சதவீதமாகவும் ஊதிய வளர்ச்சி உள்ளது.
“EY ஃபியூச்சர் ஆஃப் பே” வெளியிட்ட இந்த அறிக்கை, டிசம்பர் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை, 150 க்கும் மேற்பட்ட தலைவர்கள் அல்லது சிஎச்ஆர்ஓ (CHRO)க்களுடன் இந்தியா முழுவதிலும் உள்ள பெரிய அளவிலான நிறுவனங்கள் வரை நடத்திய ஆய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலை வாய்ப்புகளுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியதாக கூறப்படும், வளர்ந்து வரும் துறைகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இ-காமர்ஸ், டிஜிட்டல் சேவைகள், சுகாதாரம், தொலைத்தொடர்பு, கல்விச் சேவைகள், நிதி தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும்.
இந்த வளர்ந்து வரும் துறைகள் தொடர்ந்து தகுதிவாய்ந்த ஊழியர்களுக்குப் பரந்த அளவிலான வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவை அதிகம் உள்ள திறன்களுக்கு(பணிகளுக்கு) 48 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் அதிக பிரீமியம்(சம்பளம்) வழங்குகின்றன என்று அறிக்கை கூறுகிறது.
இது அடிப்படை திறன்களுடன் ஒப்பிடும்போது தேவை அதிகம் உள்ள திறன்களுக்கான பணி என்பதால், பிரீமியம் 1.9 மடங்கு அதிகமாக உள்ளது என்று அறிக்கை மேலும் தெரிவித்தது. மேலும், உயர் செயல்திறன் கொண்ட திறமைகளுடன் ஒப்பிடும்போது சராசரியாக வழங்கப்படும் ஊதிய உயர்வுகள் சராசரியாக 1:1.8 என்ற விகிதத்தில் இருக்கின்றன என்று அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.