#Breaking: திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது விதிமீறல்- மத்திய அரசு!

The Union Home Ministry has told the Tamil Nadu government that it is illegal to allow 100 per cent spectators in theaters.

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதியளித்துள்ளது விதிமீறல் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது விதித்துள்ள தளர்வுகளின்படி, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகள் உடன் 100% இருக்கைகளை வைத்து திரையரங்குகளை இயக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு விஜய், சிம்பு, உட்பட நடிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்து வந்த நிலையில், மருத்துவர்கள், பொதுமக்கள் என பலரும் திரையரங்கில் 100 சதவீத அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில்திரையரங்குகளில்100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கியது, விதிகளை மீறியதாகவும், அனுமதி வழங்கியதை வழங்கியதை திரும்பப்பெற வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளது.