குஜராத்தில் வெளியான 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்..! 157 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை!

குஜராத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 157 பள்ளியில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை

students

குஜராத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 157 பள்ளியில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை

குஜராத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மொத்தம் 64.62 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன் படி 70.62 விழுக்காடு மாணவிகளும் 59.58 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். குஜராத்தி பாடத்தில் 96,000 மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை. அதேபோல் கணித பாடத்திலும் 1,96,000 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. 1084  பள்ளிகளில் 30 விழுக்காடுகளுக்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், குறிப்பாக 157 பள்ளியில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.