2K கிட்ஸின் அட்டகாசம்.!வகுப்பறையில் காதலிக்கு தாலிக்கட்டிய 11-ஆம் வகுப்பு மாணவன்.!

An 11th class student of a government school in Andhra Pradesh has beaten up his girlfriend in the classroom.

ஆந்திரா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவன் வகுப்பில் வைத்து தனது காதலிக்கு தாலிக்கட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் அதே வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியை காதல் செய்துள்ளனர்.இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக இருவருக்கும் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே சமீபத்தில் பள்ளிகள் திறந்ததை அடுத்து அந்த மாணவன் இனி காதலியை பிரிய மனமில்லாமல் அவரது கழுத்தில் மஞ்சள் தாலியை கட்டியுள்ளார் .அதாவது கடந்த 17-ம் தேதி பள்ளிக்கு வந்த மாணவன் வகுப்பில் வைத்து அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளனர் .இதனை அதே வகுப்பில் பயிலும் வேறொரு மாணவி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

unknown node

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து , இந்த செய்தி பள்ளி முதல்வர் காதுக்கு செல்ல திருமணம் செய்து கொண்ட இருவருக்கும், மற்றும் உடந்தையாக இருந்த மாணவிகளுக்கும் டி.சி வழங்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர் . இருவருக்கும் 18 வயது ஆகவில்லை என்பதால் இந்த திருமணம் செல்லாது என்று கூறி பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.2கே கிட்ஸ்களின் இந்த அட்டகாசத்தை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விளாசி வருகின்றனர்.