இந்தியாவிற்கு மேலும் 12 சிறுத்தைகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து நாளை வருகை.!

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் நாளை இந்தியாவிற்கு வரவுள்ளன.

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் நாளை இந்தியாவிற்கு வரவுள்ளன.

இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் கீழ், நாட்டில் சிறுத்தைகளை அதிகரிக்க செய்யும் விதமாக, மேலும் 12 சிறுத்தைகள் நாளை தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வருகின்றன. இதன் மூலம் இந்தியாவில் சிறுத்தைகளை எண்ணிக்கை 20 ஆக உயர்கிறது. 12 சிறுத்தைகளில் 7 ஆண் சிறுத்தைகளும், 5 பெண் சிறுத்தைகளும் வர இருக்கின்றன.

இந்திய விமானப்படையின் (IAF) C-17 குளோப்மாஸ்டர் விமானம் மூலம் 12 சிறுத்தைகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து, மத்தியபிரதேசம்  குவாலியருக்கு காலை 10 மணிக்கு வந்ததும், அங்கிருந்து எம்ஐ-17 ஹெலிகாப்டர் மூலம் குனோ தேசிய பூங்காவிற்கு காலை 11 மணிக்கு வருகின்றன. முன்னதாக செப்டம்பர் 17, 2022 அன்று, எட்டு சிறுத்தைகள் நமீபியாவில் இருந்து குனோ தேசிய பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

இந்தியாவில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான செயல்திட்டத்தின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் குறைந்தது 10-12 சிறுத்தைகள் இந்தியாவிற்கு வருகை தரும் என்று கூறப்படுகிறது. இந்த 12 சிறுத்தைகளை சுற்றுசூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் குனோ தேசிய பூங்காவில் திறந்து விடுகின்றனர்.