ஆந்திராவில் அதிகாலை நிகழ்ந்த கோர விபத்து.. உடல் நசுங்கி 14 பேர் உயிரிழப்பு..!

Fourteen people, including five children, were killed in a road accident in Andhra Pradesh.

ஆந்திராவில்  ஏற்பட்ட கோரவிபத்தில் 5 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

சித்தூரை சேர்ந்த 18 பேர் டெம்போ வேன் மூலம் அஜ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கர்நூல் மாவட்டம் மாதவரம் அருகே லாரி மற்றும்  டெம்போ  நேருக்கு நேர் மோதி கோர விபத்து நடந்தது.

இந்த விபத்தில் டெம்போவில் 8 ஆண்கள், ஒரு குழந்தை , 5 பெண்கள் என 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.