3 பைக்குகளில் 14 பேர் பயணம்..! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!

உத்திரபிரதேசத்தில் 3 பைக்குகளில் 14 பேர்  ஒன்றாக பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் 3 பைக்குகளில் 14 பேர்  ஒன்றாக பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் உள்ள பரேலியில்  மூன்று பைக்குகளில் 14 பேர் சாகச பயணம் செய்துள்ளனர். பரேலியின் தியோரானியா பகுதியில் ஒரு பைக்கில் 6 பேரும் மற்ற இரண்டு பைக்கிலும் தலா 4 பேரும் பயணிகளும் சாலை விதிகளை மீறி பயணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

தகவல் அறிந்த காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையாக மூன்று பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பரேலி எஸ்எஸ்பி அகிலேஷ் குமார் சௌராசியா கூறுகையில், “தகவல் கிடைத்ததும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.