குலாம் நபி ஆசாத்தின் கட்சியிலிருந்து விலகிய 17 தலைவர்கள் காங்கிரஸில் இணைந்தனர்!

குலாம் நபி ஆசாத்தின் கட்சியிலிருந்து 17 ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் காங்கிரஸில் இணைந்தனர்.

குலாம் நபி ஆசாத்தின் கட்சியிலிருந்து 17 ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் காங்கிரஸில் இணைந்தனர்.

17 ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் குலாம் நபி ஆசாத் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியில் இருந்து விலகி இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இவர்களில், முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் மற்றும் பிசிசி முன்னாள் தலைவர் பீர்சாதா முகமது சயீத் ஆகியோர் அடங்குவர்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் எனப்படும் பாரத் ஜோடோ யாத்திரை நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, அதனால்தான் இந்த தலைவர்கள் அனைவரும் திரும்பி வர முடிவு செய்துள்ளனர் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.