இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,166 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்பு..!

18,166 new corona infections in India in last 24 hours

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,166 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 214 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,39,53,475 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18,166 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட  1500 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,39,53,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 214 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,50,589 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 23,624 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,32,71,915 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,30,971 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 94,70,10,175 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.