மத்திய பிரதேசத்தில் ஒரே இரவில் காணாமல் போன 1 கி.மீ சாலை – உள்ளூர் வாசிகள் புகார்!

In the area of Manjoli in the state of Madhya Pradesh, 1 km of highway has been reported missing at night.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாஞ்சோலி எனும் பகுதியில் இரவு நேரத்தில் 1 கி.மீசாலை காணாமல் போயுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தி மாவட்டம் மாஞ்சோலி எனும் பகுதியில் உள்ள சாலை இரவோடு இரவாக காணாமல் போயுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் அப்பகுதியின் பஞ்சாயத்து தலைவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள ஜானபாத் பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.எல் பிரஜாபதி அவர்கள், கடந்த இரு தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் ஒருமுறை சாலை திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், உள்ளூர்வாசிகள் இது குறித்து ஏற்கனவே புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். சாலை மட்டுமல்லாமல் அங்கு கொட்டப்பட்டிருந்த கற்கள் கூட காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே,  இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.