மத்தியப் பிரதேசத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! 40 பேர் காயம்,10பேர் கவலைக்கிடம்.!

மத்தியப் பிரதேசத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில், இன்று காலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி, விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 40 பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு பேருந்துகளிலும் 70 பேர் பயணித்ததாக கந்த்வா மாவட்ட கலெக்டர் அனுப்குமார் சிங் கூறினார்.

ஒரு பேருந்து ரெஹத்கானில் இருந்து காண்ட்வாவுக்கு வந்து கொண்டிருந்தது, மற்றொன்று கந்த்வாவிலிருந்து ஹோஷங்காபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து லாரி ஒன்றை முந்த முயற்சிக்கும்போது, எதிரில் வந்த பேருந்து மீது மோதியதில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, என்று நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளார்.

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் மற்றும் அவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.