பீகாரில் முதியவரை தாக்கிய 2 பெண் போலீசார்..! வெளியாகிய அதிர்ச்சி வீடியோ..!

பீகார் மாநிலத்தில் முதியவரை தாக்கிய இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகளின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் முதியவரை தாக்கிய இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகளின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார்: கைமூர் மாவட்டத்தில் முதியவரை தெருவில் வைத்து பீகார் காவல் துறையைச் சேர்ந்த இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகள் சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட பாண்டே ஜி என்ற முதியவர் கைமூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். அவர் போலிஸாரின் தாக்குதலை தடுக்க முயன்றபோது பெண் போலீஸ் அதிகாரிகள் அவரை பலமுறை தடியால் தாக்கினர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையாக இருந்தாலும், காவல்துறையினரின் தாக்குதலைத் தடுக்கவோ முதியவருக்கு உதவவோ யாரும் முன்வரவில்லை. இந்த சம்பவம் குறித்து பீகார் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

unknown node