புதுச்சேரியில் 2 காவலர்கள் தற்கொலை – காவலர்களுக்கு கவுன்சிலிங் தர உத்தரவு..!

புதுச்சேரியில் அனைத்து காவல் நிலையங்களில் உள்ள காவலர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்குமாறு காவல் கண்காணிப்பாளர் தீபிகா உத்தரவு.

புதுச்சேரியில் அனைத்து காவல் நிலையங்களில் உள்ள காவலர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்குமாறு காவல் கண்காணிப்பாளர் தீபிகா உத்தரவு.

புதுச்சேரி மடுக்கரை இந்திரா நகரை சேர்ந்தவர் மலையராஜ். இவர் கோரிமேட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர்.

காவலர் தற்கொலை

unknown node

இவர் கடந்த எட்டு வருடங்களாக இவர் சக்கரை நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், காலில் ஏற்பட்ட புண் ஆறாமல் மீண்டும் மீண்டும் வலியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மருத்துவர் காலை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன்னதாக புதுச்சேரியை சேர்ந்த தன்வந்திரி நகர் காவலர் நாகராஜ் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காவலர்களுக்கு கவுன்சிலிங்

unknown node

புதுச்சேரியில் இரண்டு காவலர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், புதுச்சேரியில் அனைத்து காவல் நிலையங்களில் உள்ள காவலர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்குமாறு காவல் கண்காணிப்பாளர் தீபிகா உத்தரவு பிறப்பித்துள்ளார். வரும் 23ஆம் தேதிக்குள் அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர் நலக் கூட்டம் நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.