2 ஆண்டு சிறை தண்டனை! மனு தள்ளுபடி... குஜராத் ஐகோர்ட்டை நாடும் ராகுல் காந்தி!

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக குஜராத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்கிறார் ராகுல் காந்தி.

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக குஜராத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்கிறார் ராகுல் காந்தி.

பிரதமர் மோடி மற்றும் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சூரத் செஷன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது உறுதியாகியுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை தொடர்பான வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்ததால் குஜராத் ஐகோர்ட் செல்கிறார் ராகுல் காந்தி. இதனிடையே, 2 ஆண்டு சிறை தண்டனை சூரத் அமர்வு நீதிமன்றத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.