புதுச்சேரியில் காலை 11 மணி வரை 20.07 சதவீத வாக்குகள் பதிவு!

In Puducherry, the turnout was 20.07 per cent as of 11 am, while the Assembly polls were in full swing.

புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தில் 11 மணி நிலவரப்படி 20.07 சதவீத வாக்குகள் பதிவானது.

புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கியது. அங்கு மொத்தமாக 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் காரணமாக அம்மாநிலத்தில் புதன்கிழமை காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தடையின்றி வாக்களிக்க மத்திய ஆயுதப்படை பணியில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் 11 மணி நிலவரப்படி 20.07 சதவீத வாக்குகள் பதிவானது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி, உள்ளிட்ட பலரும் தங்களின் வாக்குகளை பஹிவு செய்தனர்.