டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தோற்றால் 2,199 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 87,360 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 2,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 87,360 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 2,113 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,348 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,742 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 26,270 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
unknown node