கடந்த ஆண்டை விட 2522.5 கோடி வருவாய் அதிகரிப்பு – உத்திர பிரதேச முதல்வர்!

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has said that the revenue among corona has increased by Rs 2522.5 crore over last year.

கொரோனாவுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டை விட 2522.5 கோடி வருவாய் அதிகரித்துள்ளதாக உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பல உயிரிழப்புகள் மற்றும் பிரச்சனைகள் எழுந்த போதிலும், உத்திர பிரதேச மாநிலத்தில் பொருளாதார இழப்பீடுகளை எதிர்கொள்ளும் வகையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 2522.5 கோடி அதிகமாக வருவாய் கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் சுரேஷ் கன்னா அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 2019 டிசம்பரில் 10,008.2 கோடி வருவாய் வந்ததாகவும், இந்த ஆண்டு 2020 டிசம்பரில் 12,530.7 கோடி வருவாய் வந்துள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள உத்திர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள், நெருக்கடியான கொரோனா காலகட்டத்திலும் பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியில் நிதியமைச்சர் சுரேஷ் கண்ணாவின் தலைமை சிறப்பாக செயல்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வருவாயை கக்கிடுகையில், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வருவாய் 2522.5 கோடி அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.