கொரோனாவிலிருந்து 3.40 கோடி பேர் குணமடைவு;122.41 கோடி பேருக்கு தடுப்பூசி!

3.40 crore people recover from corona; 122.41 crore get vaccinated!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,309 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 236ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,72,523 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 8,309 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட  400 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,45,80,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 236 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,68,790 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 9,905 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,40,08,183 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,03,859 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 1,22,41,68,929 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 42,04,171 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.