சிறு, குறு தொழில்துறைக்கு கொடுக்கப்படும் கடனை 4 ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம்.
சிறு, குறு தொழில்துறைக்கு பிழையின்றி 3 லட்சம் கோடி மதிப்பிலான கடன் உதவி வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த கடனுதவி திட்டம் அக்டோபர் 31-ம் தேதி வரை செயல்படுத்தப்படும் என்றும் , 3 லட்சம் கோடி கடனுதவி திட்டத்தால் 45 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் ரூ.100 கோடி வியாபாரம் உள்ள சிறு தொழில்களுக்கு ரூ.25 கோடி கடன் இருந்தால் கூடுதல் கடன் தரப்படும். சிறு, குறு தொழில்துறைக்கு கொடுக்கப்படும் கடனை 4 ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம். ஓராண்டுக்கு கடன்களை வசூலிக்கப்படாது என்று அவர் கூறினார். புதிய கடன் வசதியை பெற சொத்து பத்திரங்கள் போன்ற ஆவணங்கள் எதையும் தரத் தேவையில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.