ஸ்ரீநகர் மாவட்ட பகுதியில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படை (சிஆர்பிஎஃப்) இன்று காலை முதல் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
unknown nodeஅப்போது, பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் பயங்கரவாதிகள் இருப்பதாகவும், பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சரணடையும்படி கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.