ஷோபியன் மாவட்டத்தில் ஒரே இரவில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை ..!

தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் ஒரே இரவில் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியோர் ஷோபியன் மாவட்டத்தின் சுகன் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது, பயங்கரவாதிகளுக்கு சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், ராணுவம் தரப்பிலும் பதிலுக்கு பதிலடி கொடுத்தது என்று ஒரு காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
மேலும், இருள் காரணமாக இந்த சண்டை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். சிக்கி கொண்ட பயங்கரவாதிகள் தப்பிக்க சில முயற்சிகளை மேற்கொண்டனர் என்று கூறினார்.
பின்னர், மீண்டும் நேற்று அதிகாலை, துப்பாக்கிச் சூடு நடவடிக்கை தொடங்கியது. இந்த சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். என்று அந்த காவல்துறை அதிகாரி கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025