இந்தியா நேபாளத்திற்கு 34 ஆம்புலன்ஸ்கள், 50 பள்ளி பேருந்துகளை பரிசாக அளித்துள்ளது.
இந்தியா இன்று நேபாளத்திற்கு 34 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 50 பள்ளி பேருந்துகளை பரிசாக வழங்கியதாக நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. நேபாளத்திற்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா நேபாள கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அசோக் குமார் ராய் முன்னிலையில் வாகனங்களின் சாவியை பல்வேறு அமைப்புகளிடம் ஒப்படைத்துள்ளார்.
இதன்பின் பேசிய நவீன் ஸ்ரீவஸ்தவா, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த நேபாள அரசாங்கத்தின் முயற்சிகளை மேம்படுத்துவதற்காக, நேபாள-இந்தியா மேம்பாட்டுக் கூட்டுத் திட்டத்தின் கீழ், இந்திய அரசாங்கத்தின் நீண்டகால பாரம்பரியங்களில் இதுவும் ஒன்றாகும் என்று கூறினார்.
unknown nodeமேலும், இது நீண்ட வரலாறு மற்றும் மரபு கொண்டது மற்றும் நேபாளம் முழுவதும் புவியியல் ரீதியாக பரவி மக்களின் வாழ்க்கையைத் தொட்டு, நேபாளத்தின் வளர்ச்சிப் பயணத்தில் உறுதியான முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறது என்று நேபாளத்திற்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.
அவரைத்தொடர்ந்து நேபாளத்தில் இந்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பாராட்டிய கல்வி அமைச்சர் ராய், இந்த உதவி மக்களுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்தியா 1994ம் ஆண்டு முதல், நேபாளம் முழுவதும் உள்ள பல்வேறு சுகாதார மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 974 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 234 பள்ளி பேருந்துகளை பரிசாக அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
