அதிகரிக்கும் கொரோனா.. இந்தியாவில் ஒரே நாளில் 354 பேர் உயிரிழப்பு!

A further 354 people have died of corona in India in the last 24 hours. In addition, 53,480 new cases of coronavirus were confirmed.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 354 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், புதிதாக 53,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்தியாவில் தற்பொழுது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53,48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,21,49,335 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 41,280 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,14,34,301 ஆக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த 24 மணிநேரத்தில் 354 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,62,468 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 5,52,566 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், தடுப்பூசி எடுத்துக்கொண்டோரின் எண்ணிக்கை 6,30,54,353 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.