சபரிமலை ஐயப்பன் கோவில் ஊழியர்கள் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

A total of 37 people have been diagnosed with corona infection, including priests and staff members of the Sabarimala Iyappan Temple.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சன்னிதான பணியில் ஈடுபடும் அர்ச்சகர்கள், தேவசம் போர்டு ஊழியர்கள் என மொத்தம் 37 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை, கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அதனைதொடர்ந்து கோவில் நடை சாத்தப்பட்டு, மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதனையடுத்து சன்னிதான பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அர்ச்சகர்கள், தேவசம் போர்டு ஊழியர்கள் என மொத்தம் 37 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து அவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.