குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த 18 பேரின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிதி – குஜராத் முதல்வர்!

Gujarat Chief Minister has announced Rs 4 lakh financial assistance to the families of the victims of a hospital fire in Paruch, Gujarat.

குஜராத் பருச்சில் உள்ள மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குஜராத் முதல்வர் 4 லட்சம் நிதி உதவி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் குஜராத் பருச் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 70 பேர் சிகிச்சைக்காக இருந்த நான்கு மாடி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அங்கிருந்த பல கொரோனா நோயாளிகள் புகை மற்றும் தீ காரணமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் 24 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் தீ விபத்து குறித்து தெரிவித்துள்ள தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர், தீ விபத்து ஏற்பட்டதற்கான கரணம் இன்னும் தெரியவில்லை என கூறியுள்ளார். மேலும், 50 க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளூர் வாசிகள் மற்றும் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டதாக தெரிவித்தார். இந்நிலையில், இந்த தீ விபத்தில் உயிரிழந்த 18 பேரின் குடும்பத்திற்கும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி 4 லட்சம் நிதி உதவியை  அறிவித்துள்ளார்.