வடமாநிலங்களில் கள்ளச்சாராயம் மக்களின் உயிரை காவு வாங்கி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
ஆந்திர மாநிலத்தில் சாராயம் என்று குடித்தவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடமாநிலங்களில் கள்ளச்சாராயம் என்பது மக்களின் உயிரை அடிக்கடி எடுக்கும் ஒரு மிகப்பெரிய தீங்காக இருக்கின்றது.இதை அரசாங்கமும் கட்டுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டும் அரசுக்கு பெரும் சவாலாக இருக்கின்றது. சமீபத்தில் கூட அசாம் , உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேஷத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பணி செய்யும் ஊழியர் ஒருவருக்கு கருப்பு கேன் ஒன்று கிடைத்தது. அதனை சாராயம் என்று நினைத்து வீட்டிற்கு எடுத்து சென்று தங்கள் பகுதியில் உள்ள நான்கு பேருக்கும் வழங்கி குதித்துள்ளார்.இதை குடித்த பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .