முதலில் சீனாவை தாக்கிய கொரோனா வைரஸானது, ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் இந்த நோயின் பாதிப்பு பரவி வந்த நிலையில், இதனை தடுக்கு முயற்சியில் ஒவ்வொரு நாட்டு அரசும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 4 பேரும் 64 வயதிற்கு மேற்பட்டவர்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.