45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 41.7% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத் துறை!

41.7% of people in the country between the ages of 45 and 60 are vaccinated. According to the Federal Department of Health, 25.3% of people between the ages of 18 and 44 have been vaccinated.

நாட்டில் 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 41.7% தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் 25.3% தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாடு முழுவதும் மிக அதிகளவு பாதிப்புகளையும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அது ஒரு பகுதியாக பல இடங்களில் தற்போது தடுப்பூசிகள் போடப்படும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது, அதன் பின்பாக 18 முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இதுவரை 41.7% தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 33 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் 25.3% தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.