மத்திய பிரதேசத்தில் இடி மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழப்பு...!

Five people have been killed and 18 others injured in lightning strikes in four parts of Madhya Pradesh.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 4 பகுதிகளில் இடி மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள நான்கு வெவ்வேறு பகுதிகளில் இடி மின்னல் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் ஆங்காங்கு இடி மின்னல் ஏற்பட்டுள்ளது.

இந்த இடி மின்னல் காரணமாக ஐந்து பேர் பலியாகியுள்ளதுடன், 18 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி யுரேகா, பிபரியா, சவ்முகா மற்றும் சிம்ரா குர்த் ஆகிய கிராமங்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை துறை குறிப்பிட்டுள்ளது.