டெல்லியில் கொரோனா தோற்றால் இன்று 50 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,165 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,02,831 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 2,129 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 74,217 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 72.17 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும், ஒரே நாளில் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,165 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 25,449 பேர் கொரோன தோற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
unknown node