மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் இதுவரை இல்லாத அளவாக, அங்கு ஒரே நாளில் 5,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அங்கு இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 5,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,00,064 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 295 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,671 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3,395 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,08,082 ஆக உயர்ந்துள்ளது. அங்கு 83,295 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.
unknown node