நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம்..!

நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

Hero Image

நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

நேபாளத்தில் வெள்ளிகிழமை இரவு 11.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலநடுக்கமானது நேபாளத்தில் 10 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுடெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும்ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். தற்போதைக்கு உயிர், பொருள் சேதம் குறித்த தகவல் ஏதும் ஏற்படவில்லை. நிலநடுக்கம் சுமார் ஒரு நிமிடம் உணரப்பட்டது.