தலைநகரில் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 63 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் ஒரே நாளில் 63 பேர் கொரோனா தோற்றால் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,067 ஆக உயர்வு.

டெல்லியில் ஒரே நாளில் 63 பேர் கொரோனா தோற்றால் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,067 ஆக உயர்வு.

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 2,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 99,444 ஆக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 3,083 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 71,339 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 70.22 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,067 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 25,038 பேர் கொரோன தோற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

unknown node