உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த நாய் மீது சாலை போட்டதில் அந்த நாய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது சாலையின் ஓரத்தில் நாய் ஒன்று தூங்கிக்கொண்டிந்தது. அந்த நாயை விரட்டி விடாமல் அதன் மீது சூடான தாரை ஊற்றி, ரோட் ரோலர் ஏற்றி சாலை போட்டுள்ளனர்.
unknown nodeஇதில் வெகுநேரம் நகரமுடியால் கிடந்த அந்த நாய் பரிதாபமாக இறந்து போனது. இந்த அளவுக்கு அஜாக்கிரதையாக ஊழியர்கள் சாலை போட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
unknown nodeஇந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ‘மனிதாபிமானம் இறந்து விட்டதா?’ என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
unknown nodeஇந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.