இந்தியா-வங்கதேசம் இடையே நடந்த மாநாட்டில் ஏழு  ஒப்பந்தங்கள் கையெழுத்து

7 Agreements signed during the PMModi &Bangladesh Prime Minister Sheikh Hasina India-Bangladesh Virtual Summit

இந்தியா-வங்கதேசம் இடையே நடந்த மெய்நிகர் மாநாட்டில் ஏழு  ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் உச்சி மாநாடு நடைபெற்றது. இருதரப்பு உறவுகள் தொடர்பாகவும்,கொரோனாவிற்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் ஆலோசித்தார்கள்.மேலும் பிறகு சிலஹதி – ஹல்திபாரி இடையே ரயில் சேவையை இரு நாட்டு தலைவர்களும் தொடங்கி வைத்தார்கள்.

இதனிடையே இந்தியா-வங்கதேசம் இடையே நடந்த மெய்நிகர் மாநாட்டில் ஏழு  ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வங்கதேசத்துக்கான இந்திய தூதர், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகச் செயலாளர் மற்றும் வங்கதேச அதிகாரிகள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

ஒப்பந்த விவரம் :

1. ஹைட்ரோ கார்பன் துறையில் இணைந்து செயல்படுதல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

2.உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் சமுதாய வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்த இந்திய மானிய உதவி அளிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

3.எல்லை கடந்த யானைகள் பாதுகாப்புக்கான நெறிமுறைகள் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

4.திடக்கழிவு மேலாண்மைக்கான சாதனங்களை வழங்குதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

5.வேளாண்துறை ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

6.வங்கதேசம் தாகாவில் உள்ள தேசத்தந்தை பங்காபந்து ஷேக் முஜிபூர் ரகுமான் நினைவு அருங்காட்சியகம், தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

7.இந்தியா-வங்கதேசம் சிஇஓ கூட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.