உ.பி.யில் லட்டு வாங்கும் நிகழ்வில் கோபுரம் சரிந்து விழுந்ததில் 7 பேர் பலி.. 40 பேர் படுகாயம்!

உத்தரபிரதேசத்தில் ஆன்மீக நிகழ்ச்சியின்போது லட்டு பிரசாதம் வாங்கச் சென்றபோது மேடை சரிந்து 7 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Laddu Nirvan Mahotsav

பாக்பத் : உத்தரபிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் நடைபெற்ற ஆன்மிக திருவிழாவில் ‘லட்டு பிரசாதம்’ வாங்க சென்ற பக்தர்கள் மீது ,மரத்திலான மேடை இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாக்பத்  மாவட்ட மாஜிஸ்திரேட் கூறுகையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  அவர்களில் 20 பேர் முதலுதவிக்குப் பிறகு வீடு திரும்பினார், மீதமுள்ளவர்கள் சிகிச்சையில் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவத்தை அறிந்து, காயமடைந்தவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க உள்ளூர் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாக தெரிவித்துக்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்