மகாராஷ்டிராவில் புதிதாக 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி ...!

With the confirmation of omega-7 infection in 7 new cases in Maharashtra, the total number of cases in the country has increased to 12.

மகாராஷ்டிராவில் புதிதாக 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

தென் ஆபிரிக்க நாடுகளில் பரவி வரக்கூடிய ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் சிலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரக்கூடிய பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளதுடன், விமான நிலையங்களிலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதில் ஏற்கனவே 5 பேருக்கு நாடு முழுவதும் ஓமைக்ரான் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் புதிதாக 7 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

அதில் நான்கு பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் எனவும், 3 பேர் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகள் இருந்த உறவினர்கள் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஓமைக்ரான்  உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஓமைக்ரான் தொற்று பாதிப்பு 12 ஆக அதிகரித்துள்ளது.