இந்தியாவில் இதுவரை 90 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

According to Union Health Minister Mansuk Mandavia, 90 crore people in India have been vaccinated so far.

இந்தியாவில் இதுவரை 90 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை தற்பொழுது நாட்டில் குறைந்து வரும் நிலையில், மூன்றாம் அலை வருவதை தவிர்க்கும் விதமாகவும், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதுவரை நாடு முழுவதும் 90 கோடி பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node