இமாச்சல பிரதேசத்தில் ரூ.90,000 பைக்கிற்கு 1 கோடி ரூபாய் செலவு செய்து ஒருவர் ஃபேன்சி நம்பர் வாங்கியுள்ளார்.
இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்காய் நகரில் ஒரு நபர், ரூ.90,000 மதிப்புள்ள ஸ்கூட்டி வாங்கும்போது அதனை RTO அலுவலகத்தில் பதிவு செய்து பெறும் நம்பருக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். ஆன்லைனில் நடைபெற்ற ஃபேன்சி நம்பருக்கான ஏலத்தில் தொடக்க விலையாக ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நபர் ஒரு கோடி ரூபாய்க்கு அந்த HP-99-9999 என்ற ஃபேன்சி நம்பரை தேர்ந்தெடுத்து பெற்றுள்ளார்.