டெல்லியில் 9, 11-ம் வகுப்புகளை திறக்க அனுமதி – அமைச்சர் மணீஷ் சிசோடியா

The government has given permission to open 9th and 11th classes from February 5 in all schools in Delhi.

டெல்லியில் அனைத்து பள்ளிகளிலும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 வகுப்புகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகள் பிப்ரவரி 5ம் தேதி முதல் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  டெல்லி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா, பிப்ரவரி 5 முதல் பெற்றோரின் அனுமதியுடன் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முகக்கவசம், சமூகஇடைவெளி, கிருமி நாசினி உள்பட கொரோனா விதிகளை  அதிகாரிகள் தீவிரமாக பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகள் மார்ச் 16 முதல் மூடப்பட்டன. பின்னர், மார்ச் 25 முதல் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.