மும்பையில் 20 மாத பெண் குழந்தை பலாத்காரம்..! 35 வயது நபர் கைது..!

மும்பையில் 20 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பையில் 20 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை வோர்லியில் 20 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 35 வயது நபரை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபர் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர். அவர் சில நாட்களுக்கு முன்பு குழந்தையின் பெற்றோர் இல்லாத நேரத்தில் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

குழந்தை அழுது கொண்டே வலியால் துடித்ததை பார்த்து ஏதோ நடந்திருப்பதை உணர்ந்த குழந்தையின் பெற்றோர்கள் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகாரளித்தனர். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.