மகாராஷ்டிரா : வெடிபொருள் தொழிற்சாலையில் பயங்கர விபத்து! 5 பேர் பலி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ராணுவதிற்கு தேவையான வெடி மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை திடீரென விபத்து ஏற்பட்டது.

Maharastra Bhandara Factory accident

மும்பை :  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே பாந்தரா மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது என்றும் இதில் 5 பேர் உயிரிழந்து இருக்க கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, பாந்தரா மாவட்ட ஆட்சியர் சஞ்சய் கோல்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், ” இன்று காலை 10.30 மணியளவில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்து ஏற்பட்டதில் மேற்கூரை பெயர்ந்துள்ளது. விபத்து நேர்ந்த சமயத்தில் 12 பேர் அங்கிருத்துள்ளனர். சம்பவம் அறிந்த உடன் தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். ” என தெரிவித்தார்.

மேலும், ” இதுவரை 2 பேர் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து இந்திய ராணுவத்திற்கு தேவையான வெடி மருந்துகளும் தயாரிக்கபடுகிறது என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்