தொலைக்காட்சி நேரலையில் ‘தகாத’ வார்த்தைகள்… சீமான் ஆவேசம்! 

தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் , பெரியார் பற்றிய விமர்சனங்களை முன்வைத்து பேசுகையில் சில தகாத வார்த்தைகளை கூறியுள்ளார்.

NTK Leader Seeman speech

சென்னை : இன்று பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் 51 பேர் உட்பட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மாற்று கட்சியினர் என சுமார் 3 ஆயிரம் பேர் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

இந்த இணைப்பு குறித்து இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசினார். “நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுக கட்சியில் இணைந்தவர்கள் குறித்து மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள். திமுக கட்சியையே எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் தான் சென்று வளர்க்க வேண்டியுள்ளது.  ” என விமரணசம் செய்தார்.

அதன் பிறகு தனியார் தொலைக்காட்சியான புதிய தலைமுறை சார்பாக தனித்து பேட்டியளித்து இருந்தார் சீமான். அப்போது அவர் ஆவேசமாக பேசியபோது கூறிய  சில தகாத வார்த்தைகள் கேட்போரை முகம் சுளிக்க வைத்துவிட்டது.  அவர் கூறுகையில், “நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துக்கள் இன்னும் கூட சொல்லுங்கள் ஆட்களை அனுப்பி வைக்கிறோம்.” என கூறிய சீமான்,

அடுத்து ஆவேசமாக, “எப்படி அம்பேத்கரையும் பெரியாரையும் ஒப்பிட்டு பேச முடியும்? சூத்திரர்களை வேசி மகன் கூறியவர்,”  என ஆவேசமாகி சில தகாத வார்த்தைகளை கூறினார் சீமான். மீண்டும் அதே போன்ற தகாத வார்த்தைகளை கூறி பெரியார் மீதான தனது விமர்சனத்தை ஆவேசமாக முன்வைத்தார் நாம் தமிழர் கட்சித் ஒருங்கிணைப்பாளர் சீமான்.  பொதுமக்கள் பார்க்கும் நேரலை செய்தி நிறுவன நேர்காணலில் தகாத வார்த்தைகள் பேசிய சீமானின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்