தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் யார் யார்? விஜய் எடுக்கும் முக்கிய முடிவு!
இன்று முதற்கட்டமாக தவெக கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கொடுத்தவர்களை அக்கட்சி தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்குள் கட்சியில் நிர்வாகிகளுக்கு பொறுப்பை வழங்க கட்சி தலைமை முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதற்காக கடந்த ஜனவரி 10ஆம் தேதி சென்னை பனையூரில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஒரு சில மாவட்டங்களில் கட்சி தலைமை நியமித்த நிர்வாகிகள் உடன் கட்சியினர் அதிருப்தி தெரிவித்த காரணத்தால் அன்றைய தினம் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து, அன்றைய தினம் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர் பதவிகளுக்கு விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. அன்று விருப்பம் தெரிவித்தவர்களுடன் இன்றைய தினம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய தினம், ராணிப்பேட்டை, அரியலூர், புதுக்கோட்டை, சென்னை, தர்மபுரி உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுக்கு மட்டும் பொறுப்புகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இதில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் பனையூர் கட்சி அலுவலகம் வரவுள்ளார் எனவும் கட்சி நிர்வாகிகள் நியமனம் குறித்து அவர் முடிவு செய்ய உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு விழாவில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் யார் என்ற விவரம் முழுதாக அறிவிக்கப்படும் செய்திகள் வெளியாகி உள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025