ஹரியானாவில் பைக் மீது கார் மோதி, 3 கி.மீ இழுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் பைக் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மோதலில் சிக்கிய பைக்கை 3 கி.மீ வரை இழுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குருகிராம் பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளது. பைக்கின் அருகே நின்று கொண்டிருந்த உரிமையாளர் சிறு இடைவெளியில் உயிர் தப்பினார்.
சாலையில் பயணித்தவர்கள் வாகனத்தை நிறுத்த முயற்சித்தபோது கார், பைக்கை 3 கி.மீ தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது. சிறிது நேரத்தில் வாகனத்தின் அடியில் சிக்கியிருந்த பைக் வெளியே வந்து சாலையோரம் விழுந்ததை அடுத்து கார் ஓட்டுநர் தனது வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் பைக் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு புகாரைப் பெற்றனர்.
அவர் அளித்த புகாரின் பேரில் கார் ஓட்டுநருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்தனர். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஃபரிதாபாத்தில் வசிக்கும் சுஷாந்த் மேத்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்திற்கு காரணமான காரை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.
unknown node