சண்டிகரில் தெருநாய்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்த 25 வயது பெண் மீது கார் மோதிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் உள்ள சண்டிகரில் 25 வயது பெண் தெரு நாய்களுக்கு உணவளித்து கொண்டிருந்தார். அந்தநேரத்தில் வேகமாய் வந்த கார் ஒன்று அந்த பெண் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சண்டிகரின் செக்டர் 53-ல் உள்ள பர்னிச்சர் மார்க்கெட்டில் நிகழ்ந்துள்ளது.
கார் அந்த பெண் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்த போலீசார் காயமடைந்த அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்பொழுது அவர் செக்டர் 16-ல் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், அந்த பெண் மீது மோதிய காரின் உரிமையாளர் தலைமறைவாக உள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.
unknown node