ஒடிசாவின் பாலசோரில் சரக்கு ரயிலில் தீ விபத்து..!

ஒடிசாவின் பாலசோரில் சரக்கு ரயிலின் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Fireingoodstrain

ஒடிசாவின் பாலசோரில் சரக்கு ரயிலின் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள ரூப்சா சந்திப்பில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலை அறிந்து வந்த தீயணைப்பு படையினரால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால், தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

unknown node

மேலும், ஜூன் 2ம் தேதி பாலசோரின் பஹனகா ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து உலக நாடுகளை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது.